Skip to main content

ஒரு வோட்கா பாட்டிலுக்கா இந்த அக்கப்போரு

Published on 05/01/2018 | Edited on 05/01/2018
"ஒரு வோட்கா பாட்டிலுக்கா இந்த அக்கப்போரு"



டென்மார்க் தலைநகரம் கோபென்ஹேகனில் உள்ள ஒரு மது விடுதியில் வோட்கா ஒன்று திருடப்பட்டுள்ளது என்ற செய்தி உலகம் முழுவதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அது வெறும் வோட்கத்தானே அதை திருடி என்ன பிரயோஜனம், இதில் என்ன சர்ச்சைனு கேட்கிறீர்களா. அது ஒன்றுமில்லை அந்த வோட்காவின் விலை சுமார் 1.3 மில்லியன் டாலர். அதாவது இந்திய பணமதிப்பின்படி 8 கோடி ரூபாயாம். அந்த மது விடுதியின் உரிமையாளர் இங்மர் கூறுகையில், " நான் எனது பாரில் 1200க்கும் மேற்பட்ட வோட்கா வகைகளை சேகரித்து வைத்துள்ளேன். அதில் இதுவும் ஒன்று. இந்த வோட்காவை ரஷியாவில் இருக்கும் பிரபல டார்ட்ஸ் மோட்டார் கம்பேனியிடம் இருந்து கடனுக்கு வாங்கி என் வோட்கா மியூசியத்தில் வைத்தேன். அந்த வோட்காவுக்கு நான் காப்பீடு கூட எடுக்கவில்லை" என்றார்.

ஏன் இந்த வோட்காவுக்கு இவ்வளவு அக்கப்போரு என்றால் அந்த வோட்காவை தயாரிப்பதற்கு ஒரு கதை இருக்கிறதாம். அந்த வோட்கா கோப்பையின் பெயர் "ரூஸோ பால்டிக் வோட்கா". ரூசோ பால்டிக் எனும் கார் கம்பேனியின் நூறுவது ஆண்டை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டதாம். இந்த மதுக்குவளை 3 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியை கொண்டு (எந்த கலப்படமும் இல்லாமல்) செய்யப்பட்டுள்ளது. இதன் மூடி வைரத்தாலானது. இதை கார் நிறுவனம் தயாரித்ததால்,  அந்த நிறுவனத்தின் கார் ரேடியேட்டர் பகுதியை போன்று தோற்றம் அளிக்கும் வகையில் அதன் சின்னத்தை (symbol) உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அந்த நிறுவனத்தில் ரெட் எடிஷன் எனும் ஒரு வகை காரை வாங்கினால் மூன்று வோட்கா பாட்டில் இலவசம் என்று விளம்பரம் செய்தனர். அந்த காரின் விலை 1.6 மில்லியன் இந்த வோட்காவின் விலை 1.3 மில்லியன். ஒன்று வாங்கினால், மூன்று வோட்கா பாட்டில் இலவசமாம். எதுவாக இருந்தாலும் மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடுதானே.       

-சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்