Skip to main content

செல்லப் பிராணிகளுக்காக சிறப்புப் பிரார்த்தனை!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
செல்லப் பிராணிகளுக்காக சிறப்புப் பிரார்த்தனை!



அந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் மனிதர்களுடன் நாய்களும், பறவைகளும், மீன்களும், பூனைகளும் நிறைந்திருந்தன.

விலங்குகள், பறவைகளிடம் இருந்து வரும் ஒருவிதமான நாற்றம் சர்ச்சை நிறைத்திருந்தது.

பாதிரியார் டி சோசா விலங்குகளுக்காவும், பறவைகளுக்காகவும் மீன்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்தார். வரிசையாக அவரிடம் தங்களுடைய செல்லப் பிராணிகளுடன் சென்றார்கள். அவர் அவற்றின் மீது புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தார்.

மும்பையில் உள்ள செயின்ட்  ஜான் எவாஞ்சலிகல் சர்ச்சில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இது நடக்கிறது. 20 ஆண்டுகளாக பாதிரியார் டி சோசா இதை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.

செயின்ட் பிரான்சிஸ்தான் முதன்முதலில் செல்லப் பிராணிகளுக்காக இத்தகைய பிரார்த்தனைகளை நடத்தினார். அவருடைய வழியிலேயே இந்த பிரார்த்தனையை டி சோசா நடத்துவதாக தெரிவித்தார்.

இந்தியாவில் வேறு எந்த சர்ச்சிலும் இது நடப்பதாக தெரியவில்லை. முதன்முதலில் 20 ஆண்டுகளுக்கு முன் கோவாவில் ஒரு சர்ச்சில் இதுபோன்ற பிரார்த்தனை நடப்பதாக டி சோசா கேள்விப்பட்டார்.

அங்கு நடக்கும்போது ஏன் மும்பையில் நடத்தக்கூடாது என்று நினைத்த டி சோசா தனது சர்ச்சிலும் பிரார்த்தனையை தொடங்கியதாக கூறுகிறார்கள்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்