Skip to main content

லியோ; இரண்டு வருடத்திற்கு முன்பே சண்டை பயிற்சி - மடோனா செபாஸ்டியன் 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Leo; Fight training two years ago - Madonna Sebastian

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்தாண்டில் முதல் நாளில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக லியோ சாதனை படைத்துள்ளதாகக் கூறியது. இந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில் படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன் இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “நான் லியோ படத்தில் நடித்தது என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. கடைசி வரை என் கதாபாத்திரத்தை யாரிடமும் சொல்லவில்லை. இந்த படத்திற்காக அன்பறிவ் மாஸ்டர் இரண்டு வருடத்திற்கு முன் எனக்கு சண்டை பயிற்சி அளித்தார்” எனத் தெரிவித்துள்ளார். 

 

முன்னாதாக அவர் தனது எக்ஸ் பதிவில், "லியோவுக்கு கொடுத்த அமோக வரவேற்பிற்கு நன்றி. அற்புதமான அனுபவம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்