கோவையில் தென்னிந்திய அளவிலான
இரட்டையர் இறகு பந்து போட்டி
கோவையை அடுத்த போத்தனூரில் செவன் ஸ்போர்டஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான இரட்டையர் இறகுபந்து போட்டிகள் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இதில், கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு என, மாநில முழு வதும் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. "மெடலிஸ்ட்', "நான்-மெடலிஸ்ட்', "ஜம்பில்டு', " ஆகிய மூன்று பிரிவுகளாக, இப்போட்டிகள் நடைபெற்றன."மெடலிஸ்ட்' பிரிவில், 32 அணிகளும் "ஜம்புல்டு டபுள்ஸ்' பிரிவில், 32 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. "நான் மெடலிஸ்ட்' பிரிவின் இறுதி போட்டியில் - S K S ஜெகன்- முருகானந்தம் ஜோடி கோவை 7 எஸ் அணியை 20-11 என்ற செட் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு இளம் தொழில் முனைவோரும் சமூக ஆர்வலருமான ஆறுமுக பாண்டி பரிசு வழங்கினர். மாநில அளவில் நடைபெற்ற இந்த இரட்டையர் இறகுபந்து போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய அளவில் தேர்வு பெற வாய்ப்புள்ளதாக ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தன் காட்வின் தெரிவித்தார்.