Skip to main content

தடகள வீராங்கனை பிரியங்கா 8 ஆண்டுகள் விளையாட தடை

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
தடகள வீராங்கனை பிரியங்கா 8 ஆண்டுகள் விளையாட தடை

கடந்த 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் ஆயிரத்து 600 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா பன்வார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில், 29 வயதான பிரியங்கா, கடந்த ஆண்டு 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று முடிவை அறிவித்துள்ளது. 

இதன்படி பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பிரியங்காவின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

சார்ந்த செய்திகள்