சர்வதேச டேபிள் டென்னிஸ்: வீராங்கனை ஷெலீனா அபாரம்

17 வயதான ஷெலீனா 11-8, 13-11, 11-13, 11-7 என்ற கணக்கில் சாரா அபோஸ் டாவையும், 12-10, 4-11, 11-8, 11-9 என்ற கணக்கில் மரியம் அல்ஹோதாபியையும் தோற்கடித்தார். இதேபோல் அரை இறுதியிலும் ஷெலீனா சிறப்பாக செயல்பட்டார். முதல் ஆட்டத்தில் 11-8, 11-3, 6-11, 11-7 என்ற கணக்கில் தாகாவையும் (எகிப்து), 2-வது ஆட்டத்தில் 11-5, 12-14, 11-9, 11-6 என்ற கணக்கில் அபீர் சலாகையும் (துனிசியா) வீழ்த்தினார்.