Skip to main content

சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் மூன்றாவது சீஷன் துவங்கயிருப்பது குறித்து: விஜயபிரபாகரன்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் மூன்றாவது சீஷன்
துவங்கயிருப்பது குறித்து: விஜயபிரபாகரன்



சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் கூறியதாவது “Premier Badminton League 3rdSeason” விளையாட்டு மூன்றாவது முறையாக துவங்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடம் டிசம்பர் 22ம் தேதி முதல் 2018 ஜனவரி 14ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த விளையாட்டில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்கிறது, ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து (P.V.Sindhu) அவர்களை, இந்த முறையும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. பி.வி.சிந்து உள்ளிட்ட 1).P.V.Sindhu, 2).Gabrielle Adcock, 3).Chris Adcock 4).Aditya Joshi, 5).Tanvi Lad, 6).Tanongsak.S, 7).Brice Leverdez, 8).Daniel Farid, 9).B.Sumeeth Reddy, 10).Lee Yang, பத்து வீர வீராங்கனைகள் பலத்த போட்டிக்கு நடுவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடமாக சென்னையில் இந்த போட்டி விளையாடாத நிலையில், இந்தவருடம் பேட்மிட்டன் லீக் விளையாட்டை சென்னையில் நடந்திட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி!

சார்ந்த செய்திகள்