அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில்
வீரர்களின் கார்கள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு
அமெரிக்க நாடான இந்தியானா மாகாணத்தில் ஆண்டர்சன் கார் பந்தய மைதானத்தில் அமெரிக்க அளவிலான கார் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், எதிர்பாராத விதமாக இரு வீரர்களின் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.