ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே தீவிரவாதிகள் நடத்திய
தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் காபுலில் உள்ள ஒரு மசூதி அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆப்கான் பிரதமர் அஷ்ரப் கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.