Skip to main content

அந்தமானில் தொடர்ச்சியாக 3 முறை நிலநடுக்கம்

 

3 consecutive earthquakes in Andaman; People fear

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகியுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. முன்னதாக பிற்பகல் 1.16 மணியளவில் 4.8 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது முறையாக 5.3 ரிக்டர் அளவில் பதிவானது.

 

தொடர்ச்சியாக 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

 

முன்னதாக கடந்த 15 ஆம் தேதி ஏப்ரல் 5 ஆம் தேதி போர்ட் பிளேருக்கு கிழக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 10.47 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !