ஸ்மார்ட் போன் கேமுக்கு கண்ணை பறிகொடுத்த பெண்!
சீனாவை சேர்ந்த 21 வயது பெண் நாள் ஒன்றுக்கு தொடந்து 8 மணி நேரம் “ஹானர் ஆப் கிங்ஸ்” என்ற இணையதள விளையாட்டை விளையாடியதால் தனது வலது கண் பார்வையை இழந்திருக்கிறார். மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்த போது ரெட்டினல் ஆர்ட்ரி அக்குலேசன் எனும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ காலையில் எப்போதும் போல மணிக்கு எழுந்து உணவு உண்டு விட்டு மாலை 4 மணி வரை விளையாடுவேன். மதியம் உணவு உண்டு விட்டு சிறிய தூக்கத்திற்கு பின்னர் இரவு இரவு 2 மணி வரை விளையாடுவேன்” என்று சொல்லியிருக்கிறார். முன்னரே கண் பார்வை பறிபோய் விடும் என்று பெற்றோர்கள் கண்டித்திருகிறார்கள்.

கடந்த அக் 1 ஆம் தேதி சீனாவில் பொது விடுமுறை என்பதால் நாள் முழுவதும் அந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார். இரவு உணவுக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு கண் பார்வை பறிபோய் இருக்கிறது.
ஹானர் ஆப் கிங்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 50 மில்லியன் பேர் இந்த விளையாட்டை தினமும் விளையாடுவதாக விளையாட்டை அறிமுகம் செய்த நிறுவனம் அறிவித்தது. இந்த ஆண்டு மே மாதம் வரை உலகிலேயே அதிகம் வசூல் செய்த ஆன்லைன் விளையாட்டாக கூறப்படுகிறது.

இந்த ஆன்லைன் விளையாட்டை விளையாட 12வயதிற்கு உட்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும் எனவும்,12 முதல் 18 வயது உடையவர்கள் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும் என கால அளவு குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-சி.ஜீவா பாரதி