ராஜபக்சே மகன் கைது

இலங்கையில் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம் இத்தகைய போராட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். போலீசாரின் தடுப்புகளை மீறி நமல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நமல் ராஜபக்சேவை போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அப்போது அந்த வேனை செல்ல விடாமல், சாலையில் டயரை கொளுத்தி மறியல் செய்தனர். அப்போது அவர்களை போலீசார் விரட்டினர். போராட்டத்தின்போது 4 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். நமல் ராஜபக்சேவுடன் மேலும் இரண்டு எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.