மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ட்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர பேரழிவால் தற்போது வரை 139 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.