கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலி
சீர்காழியில் கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலியானர். நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சி கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (25) கள்ளாச்சாராயம் குடித்தார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இப்பகுதியில் போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடை செய்ய கோரியும் போலி மதுபான விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முத்துக்குமார் பலியானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சீர்காழி காவல்துறையை கண்டித்தும் சாலைமறியல் ஈடுபட்டனர்.