தன்னிடம் டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சேட்டை செய்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் போக்ஸோசட்டத்தின் கீழ் காவல்துறையில் கைது செய்யப்பட்டு ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajchan.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7வது வடக்கு விஸ்தரிப்பு தெருவினை சேர்ந்தவர் சுமேஷ். இவரது மகளான 16 வயது தேவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எதிர் வீட்டில் வசிக்கும் ரவிச்சந்திரனிடம் டியூசன் படித்து வந்திருக்கின்றார். மானகிரி ஐ.ஓ.பி.கிளையின் மேலாளராகப் பணியாற்றும் இவருக்கு தனலெட்சுமி எனும் மனைவியும், தினேஷ் மற்றும் முகேஷ் என இரு மகன்களும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். தனியாக வசித்து வந்த இவர் சம்பவத்தன்று தன்னிடம் டியூசன் படிக்க தேவியின் பின்புறமாக இறுக்கி அணைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட, அப்பெண்ணும் போராடி தன்னை விடுவித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர்களிடம் கூற, அவர்களும் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இரு தரப்பினையும் விசாரித்ததின் பேரில், ஐ.ஓ.பி.மேலாளர் மீது போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர் காவல்துறையினர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)