
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வரும் நிலையில், தற்பொழுது சென்னையில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது.
தலைநகர் சென்னையில் பாடி, கொரட்டூர், முகப்பேர், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல், போரூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பக்கத்தில் மழைபொழிந்து வருகிறது. அதேபோல் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை 2 மணிநேரம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.