Skip to main content

தமிழக காவல்துறையின் கடிவாளம் யார் கையில் உள்ளது? எடப்பாடி அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை கேள்வி?

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
தமிழக காவல்துறையின் கடிவாளம் யார் கையில் உள்ளது? எடப்பாடி அரசிற்கு ஆதித்தமிழர் பேரவை கேள்வி?

தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும்,

நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது,  கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

சனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்களின் சட்டையை கிழித்து, செல்போனை உடைத்து மண்டையை பிளந்து, தனது சர்வாதிகாரப் போக்கை  சனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கையாளர்கள் மீது காட்டிருப்பதும், மத்திய பா.ச.க அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து போராடி வரும் திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும், மத்திய மோடி அரசை திருப்தி படுத்த எடுக்கப்படிருக்கும் நடவடிக்கையாகவே தெரிய வருகிறது. மத்திய பா.ச.க அரசின் கைக்கூலியாக செயல்பட்டு தமிழக உரிமைகளை பறிகொடுப்பதோடு, அடக்குமுறை கொடுமைகளை ஏவும் தமிழக எடப்பாடி அரசின் மக்கள் விரோத போக்கை தமிழக மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

நெல்லை பத்திரிக்கையாளர்களை தாக்கிய காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெறவேண்டும், காயம் அடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதோடு,  திருமுருகன்காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 

சார்ந்த செய்திகள்