மதுரையில் ஓ.பி.எஸ் தொண்டர்கள் ஏமாற்றம்

மதுரை விமான நிலையத்திற்கு வியாழன் அன்று அதிமுகவில் துணை முதல்வராக பதவியேற்று முதன்முதலாக மதுரை வரும் ஓ.பி.எஸ்யை வரவேற்க தொண்ட்ர்களை முன்னால் எம்.எல்.ஏ புறநகர் முத்துராமவிங்கம், ராஜ்மோகன், கருணா ஆகியோர் தலைமையில் அதிகமான தொண்டர்களை அழைத்து விந்திருந்தனர்.
ஆனால் சென்னையில் விநாயகர் ஊர்வலம் என்பதால் விமானத்தை தவர விட்டு காரில் ராஜபாளையம் சென்று பூலீத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து தனது செந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்று நேற்று குருப்பெயர்ச்சி என்பதால் வீட்டின் அருகில் உள்ள கருமாரியம்மன் கோவில் சாமி தரிசனம் செய்து. நேற்று மதியம் 2 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை செல்கிறார்.
வாருங்கள் என்று முழக்கமிட பெண்கள். மாணவர்கள், நிர்வாகிகள் என புறநகரில் உள்ள 600க்கும் மேல் ஆட்களை ஏற்றி ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய் கால் குதிரை, கரகாட்டம், ஜல்லிக்கட்டு காளை வணங்கி வரவேற்பது என்று வெடி வைத்து காத்திருந்தனர். இன்றும் விமான நிலையம்வராமல் காரில் திருச்சி ராக் போட் ரயில் மூலம் இரவு சென்னை செல்கிறார்.
என்றதும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். கட்சியினரிடம் விசாரித்த போது உலகமே அனிதா தற்கொலை துயரத்தில் இருக்கும் போது இந்த சூழலில் வெடி வரவேற்பு நன்றாக இருக்காது என்று அமைதியாக ஓ.பி.எஸ் காரில் சென்று விட்டார் என்கின்றனர்.
-ஷாகுல்