விருதுநகர் வாலிபர் புதுச்சேரியில் தற்கொலை
புதுச்சேரி அருகேயுள்ள பொம்மையார்பாளையம் கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் 30 வயது தக்க வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆரோவில் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தனியார் மருத்துவமனைக்கு உடல்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் உடலை சோதனை செய்தபோது அவர் பாக்கெட்டில் ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதில் பார்த்தசாரதி S/o நாராயணயசாமி , அழகாபுரி, விருதுநகர் மாவட்டம் என்று ஆவணம் இருந்தது. இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்