நேற்று இரவு தொடங்கி வீசிய புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக கொல்லம், பத்தினம்திட்டா பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அந்த இரண்டு மாவட்டங்களிலும் சேதங்கள் கடுமையானது. சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. மின் மாற்றிகள் சேதமானது. இதன் காரணமாக கேரள அரசு கொல்லம் மற்றும்பத்தினம்திட்டாமாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிட்டுள்ளது. அதுதவிர இன்று இரவு அவரச அவசரமாக கொல்லம் மாவட்ட கலெக்டர் அந்தவழியாகதமிழக எல்லையிலிருந்து கேரளாவிற்கும், கேரளத்திலிருந்து தமிழகத்திற்கும் எந்த வாகனங்களும் செல்லக்கூடாதுஎன அறிவித்திருக்கிறார்.கேரள எல்லையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.