
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7வது நாளாக தமிழகத்தில் முன்பை விட குறைந்த பாதிப்பு தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் ஒரே நாளில் 2,762 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 107 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,12,386 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 31,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 16,74,539 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 486 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 262 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 224 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 117 பேர் இணை நோய் இல்லாதவர்கள். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 22,755 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.