Southwest monsoon in Tamil Nadu too ... Chance of heavy rain!

கேரளாவின் தெற்கு பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக நேற்று (03.06.2021) இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இப்பருவமழை செப்டம்பர் மாதம்வரைநீடிக்கும் எனவும், கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு மழையினால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயனடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம்அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment