
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மே ஆறாம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த தரைக்காற்றுடன் மழைபொழிந்தது. நாளை கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பத்து மணி வரை திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனியில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.