தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்குகள்:
கடம்பூர் ராஜு
தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜு கட்டபெம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா திரையரங்குகள் அமைப்பதற்காக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு, திரையரங்குகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.