Skip to main content

சாலை போக்குவரத்திற்கு சாவு மணியடிப்பதை திரும்பப்பெறு மோடி அரசை கண்டித்து ஆவேச முழக்கம்

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
சாலை போக்குவரத்திற்கு சாவு மணியடிப்பதை திரும்பப்பெறு
மோடி அரசை கண்டித்து ஆவேச முழக்கம்



கோவை, அக். 10 - பொதுபோக்குவரத்திற்கு சாவு மணியடிக்கும் சாலைபோக்குவரத்து புதிய சட்டதிருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டம் செவ்வாயன்று கோவையில் நடைபெற்றது.

மத்தியில் பாஜக அரசு மூன்றாண்டு கால ஆட்சியில் அடுத்தடுத்து பொதுமக்கள் மீது வகுப்புவாத தாக்குதலோடு பொருளாதார தாக்குதலையும் தொடுத்து வருகிறது. கார்ப்ரேட்டுகளின் நலனை முன்னிருத்தி மோடி அரசு புதிய சாலைபோக்குவரத்து சட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒட்டு மொத்த பொது போக்குவரத்தையும் அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களையும் தெருவில் நிறுத்துகிற சட்டம் என்பதால் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கினைப்புக்குழு சார்பில் கோவையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. 

கோவை பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார். மோடி அரசின் சாலைபோக்குவரத்து சட்ட திருத்தத்தின் அபாயம் குறித்து ஒருங்கினைப்புக்குழுவின் அமைப்பாளரும் சிஐடியு சாலைபோக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளருமான எஸ்.மூர்த்தி கண்டன உரையாற்றினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.காளியப்பன், அனைத்து ஆட்டோ சங்க கூட்டுக்கமிட்டியின் தலைவரும், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளருமான பி.கே.சுகுமாறன், சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் செல்வம், கோவை மாவட்ட சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் ஏ.எம்.ரபீக் மற்றும் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன உரையாற்றினார். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாலை போக்குவரத்தை சவக்குழியில் தள்ளும் மோடி அரசே புதிய சட்டதிருத்தத்தை திரும்பப்பெறு, பொதுபோக்குவரத்தை சீர்குலைத்து தொழிலாளிகளை நடுத்தெருவில் நிறுத்தாதே, சாலை போக்குவரத்து மசோதாவா சாவு மணியா என்கிற ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

-அருள்

சார்ந்த செய்திகள்