schools and colleges reopening madurai high court bench

Advertisment

தமிழகத்தில் வரும் நவம்பர் 16- ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (11/11/2020) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு,'தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே? டிசம்பருக்குப் பின் திறப்பது என்பது நீதிமன்றக் கருத்தே; அரசு சிறந்த முடிவெடுக்கும். பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அதிக சிரமம் ஏற்படும். பள்ளிகளை மீண்டும் திறந்த ஆந்திரா போன்ற மாநிலங்களில், ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்தனர்.

Advertisment

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நவம்பர் 9- ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை' என்றார்.

இதையடுத்து, இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை, நவம்பர் 20- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.