Skip to main content

புதுச்சேரி: போலி மருத்துவர் கைது

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
புதுச்சேரி: போலி மருத்துவர் கைது

மருத்துவம் பார்க்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் மதிகிருஷனாபுரம் பகுதியில் தனது வீட்டில் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்து வந்தவர் மணிகண்டன். இவரிடம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சார்ந்த +1 படிக்கும் மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். மருத்துவம் பார்க்க சென்ற மாணவியிடம் பாலியில் தொந்தரவு கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவர் மீது கிருமாம்பாக்கம்  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனை அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார் . இதனையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரது மருத்துவனையில் ஆய்வு செய்தபோது அவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து விட்டு இங்கே மருத்துவராக இருந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று தனது குடும்ப்த்தை பார்க்க வந்ததாக வந்த தகவலை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் வழக்கு குறித்தும் , போலி மருத்துவராக செயல்பட்டது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்