
முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தை வாரியத்திற்கு வழங்கினால் லிட்டர் 5 ரூபாயிக்கு வழங்க முடியும் என ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய ஏஜடியுசி தொழிலாளர் சம்மேளன மாநில கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். அதுபோல் பொதுச்செயலாளர் காந்தி கவுரவ தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் வரும் டிசம்பர் 15.16ல் திண்டுக்கல்லில் மாநில குடிநீர் விழிப்புணர்வு மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதுபோல் ஒரு லிட்டர் ஒரு பைசா விலைபெறாத அம்மா குடிநீரை போக்கு வரத்து துறை விற்பணை செய்வதை நிறுத்தி அதை குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக கொடுத்தால் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அதுபோல் அனைத்து குடிநீர்.கழிவு திட்டங்களையும் குடிநீர் வாரியம் மூலமாக தான் செயல்படுத்த வேண்டும். வாரியத்தில் 2500 பேர் பராமரிப்பு பணியாளராக இருக்கிறார்கள். ஆனால் 10ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கு காட்டி பல கோடி ஊழல் நடக்கிறது. அவர்களுக்கு நிர்ணயித்த சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப் படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ஊழல் நடப்பதை தடுக்க வேண்டும் என சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் துணைதலைவர்களான செல்வராஜ், பெரியகருப்பணன், சந்திரசேகரன், மாநில துணைச்செயலாளர் பழனிவேல், மண்டல செயலாளர்கள் ஜெகநாதன், மணிகண்டன், சுபாகர், மாநில குழு உறுப்பினர்கள் மாரிக்கண்ணு, வெங்கடேஷன், மணிமுத்து, அழகர்சாமி, ராமராஜ், ஜஹாங்கீர், உசேன்.செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.