Skip to main content

‘இவர்கள் அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்கலாம்’- மாவட்ட நிர்வாகம்...

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த சில தினங்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க தினசரி அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
 

athivarathar

 

--LINKS CODE------

 

கடந்த 17ஆம் தேதி சந்திரகிரகணம் என்பதால் அதற்கு பின்நடை திறக்கப்பட்டு சாமிதரிசனம்  நடைபெற்று வந்த நிலையில் அடுத்தநாள் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.  பெருமாளின் நட்சத்திரமான திருவோணநட்சத்திரம் என்பதால் 18ஆம் தேதி மூன்று மடங்கு கூட்டம் அதிகரித்தது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்த வண்ணம் இருந்தனர்.  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
 

ஆனாலும் கூட்டத்தால் வாலாஜாபாத் வரை சுமார் 10 கி.மீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மயங்கிவிழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் உள்பட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 

உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை 24 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனி கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அத்திவரதரை முதியோர், உடல் நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் முடிந்தவரை அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரம் பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்திவரதரை தரிசனம் செய்ய நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்- பிரதமர் நரேந்திர மோடி!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜூலை 31 ஆம் தேதி தமிழக வருகிறார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தங்குகிறார். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோரும் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Adivaradar swamy darsan Prime Minister Narendra Modi visit tamilnadu

 

இதையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31- ஆம் தேதி, அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 1- ஆம் தேதி, நின்ற கோலத்திற்கு அத்திவரதரையும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்ட அத்திவரதர்...குவியும் பக்தர்கள்!

Published on 30/06/2019 | Edited on 01/07/2019

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா நாளை தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, பெருநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெள்ளியன்று அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர், தைலக் காப்பு சடங்கு செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளிப்பார். இந்த விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். இரவு காஞ்சிபுரத்தில் தங்கும் அவர், அதிகாலையில் அத்திவரதரை தரிசிப்பார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

KANCHEEPURAM ATHTHIVARATHAR VARDHARAJA PERUMAL TEMPLE FESTIVAL

 

 

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய இருப்பதால், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி பேருந்து நிலையம் அமைப்பது, வாகன நிறுத்தம், மருத்துவ மையம், கண்காணிப்பு மையங்கள், பக்தர்கள் வருகைக்காக வரிசை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அத்திவரதர் பெருவிழாவையொட்டி வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என் எதிர்பார்க்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு ஆன்லைனில் ஆதார் பதிவு செய்து ஒரு முறை இலவச தரிசனமும், சிறப்பு தரிசனத்திற்கான நுழைவு சீட்டுகள் நகரில் ஆங்காங்கே உள்ள 7 மையங்களில் இன்று முதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.