Skip to main content

அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் எம்.சி.சம்பத், சுகதாரத்துறை செயலாளர் ஆய்வு!

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் எம்.சி.சம்பத், சுகதாரத்துறை செயலாளர் ஆய்வு!



கடலூர் அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண் 6 பெண் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 11 பேர்கள் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழக அரசின் முதன்மை செயலாளரும், சுகாதார துறை செயலாளருமான டாக்டர்.ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"தடுப்பு ஊசி இல்லாத ஒரு நோய் டெங்கு காய்ச்சல் நோயாகும். வாழ்விடங்களில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சல் வருகிறது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்களிடையே போதுமான அளவிற்கு விழிப்புணர்வு தேவை. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு எல்லோருடைய கூட்டு முயற்சி இருந்தால் தான் ஒழிக்க முடியும். எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தொடர் நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 125 நாடுகளில் இதனை ஒரு சவாலாக எடுத்து கொண்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பொது சுகாதார துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்