மனைகளை வரன்முறைப்படுத்த புதிய திட்டம்!
அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மனைகளை வரன்முறைப்படுத்துவற்கான காலம் 2018 மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனை விற்கப்பட்டிருந்தாலும் மனை முழுவதும் வரன்முறைப்படுத்தப்படும். நேற்று நடபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவின் சாலைகளும் உள்ளது உள்ளபடி என்ற நிலையில் வரன்முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிநபர்கள் வாங்கிய மனையை வரன்முறை செய்யும்போது ஓ.எஸ்.ஆர். விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வாங்கப்பட்ட மனைகளும் வரன்முறைப்படுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரன்முறைப்படுத்தக்கோரும் மனைகளின் பரப்பில் 10 சதவிகிதம் உள்ளாட்சிக்கு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.