Published on 07/10/2021 | Edited on 07/10/2021

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழையால் ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது.
இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் நீர் அதிகம் தேங்கியிருக்கும் மற்றும் ஏற்கனவே நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான நீர்நிலைப் பகுதிகள் என மொத்தம் 272 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதி என்று கண்டறியப்பட்டுள்ள 268 இடங்களுள், பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் மூலம் 110 மிகவும் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.