Skip to main content

மதுரை சம்பூர்ணம் விவகாரம் - மூவர் சஸ்பெண்ட்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 


மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்குள்  நுழைந்த மேலும் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   வட்டாட்சியர் சம்பூர்ணத்துடன் சென்ற 3 அதிகாரிகளுடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   

 

sa


மதுரையில் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள்  மதுரை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.  பெண்  அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும்,  அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் பரவியது.

 

 இதையடுத்து எதிர்க்கட்சியினர் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மர்மநபர்கள் புகுந்ததாக புகார் எழுந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.   அப்போது  அந்த பெண் அதிகாரி, வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பது தெரியவந்தது.    அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியிருந்த நிலையில், சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், சம்பூர்ணத்துடன் ஆவணங்கள் இருந்த அறைக்குள் சென்ற 3 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்