Congratulations to the students who topped the 10th and 12th grade exams

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி கடலூர் மாவட்ட அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பயின்று 10,12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நந்தனார் கல்விக் கழகத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே. ஐ மணிரத்னம் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்று 10ஆம் வகுப்புத் தேர்வில் 28 பேரும், 12ஆம்வகுப்புத் தேர்வில் 32 பேரும் என முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அரவிந்த் மணிரத்னம், முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் கமல் மணிரத்தினம், நந்தனார் கல்விக் கழக நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், திருவாசகம், பாலையா, அன்பழகன், காட்டுமன்னார்கோவில் பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழரசன், மணலூர் ரவி, அண்ணாதுரை, ஜெயசீலன், மனோகர், அரசு நந்தனார் ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அனைத்து பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் யூனியன் மாநிலச் செயலாளர் தங்க கஜேந்திரன் செய்திருந்தார்.