அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’காவிரி பிரச்சனை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் நியமித்திருப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல.
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவு செய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணைவேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழத்தில் உள்ள பல்கலைக்கழ வளாகங்களை காவி மயமாக்க வேண்டாமென்று ஆளுநரை வலியுறுத்தி கேடுக்கொள்கிறேன்.’’என்று குறிப்பிட்டுள்ளார்.