கர்நாடகா சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து!

சென்னை பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கர்நாடக மாநில அரசின் சொகுசு பேருந்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சாலையிலேயே பேருந்தை நிறுத்தி அவசர அவசரமாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
பேருந்தில் இருந்த அனைவரும் பத்திரமாக இறங்கி விடப்பட்டதால் உயிர்சேதம் தவீர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.