Published on 12/04/2022 | Edited on 12/04/2022

தமிழகத்தில் உள்ள இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை என மீண்டும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், டாக்டர் கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குளித்தலை என பெயர் மீண்டும் சூட்டப்பட்டுள்ளது.