Skip to main content

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் கைது!

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் கைது!

சென்னை ஓட்டேரியில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஷாகுல் ஹமீத் என்பவரை தேசிய புலணாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தேசிய புலணாய்வு அமைப்பும் மாநில காவல் துறையினரும் இணைந்து செயல்பட்டு பலரை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 3 நாட்களுக்கு முன்பு கைதான காஜா மொய்தீன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஷாகுல் ஹமீது என்பவரை தேசிய புலணாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஷாகுல் ஹமீது கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆதரவாக நிதி திரட்டுவது, பிரசாரம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்