நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து
இரண்டு சிறுவர்கள் பலி
ஆந்திர மாநில குப்பம் பகுதியில் இருந்து இரண்டு கிரானைட் கற்களை ஏற்றிகொண்டு கிருஷ்ணகிரி வந்த லாரி.., நக்கல்பட்டி என்ற கிராமத்தை கடந்தபோது குறுகலான சாலையில் சாலையில் இருந்த சிறு பள்ளத்தில் லாரி சக்கரம் சிக்கியதால் நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா இவர்களது பேரன்கள் ஹரிஷ், கவியரசு, ஆகிய மூவரும் வீட்டின் தின்னையில் அமர்ந்து இருந்தபோது., நிலைதடுமாறி மூவர் மீதும் கவிழ்ந்தது. இதில் கிரானைட் கற்கள் மேலே விழுந்ததில் சிறுவர்கள் அரிஷ் மற்றும் கவியரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சந்திரா கால்கள் முறிந்தது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் வாகனம் மூலம் கற்கலை நகர்த்தி உடல்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்த சந்திராவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுனர் நரசிம்மன் என்பவரை கைது செய்து கந்திகுப்பும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- எம்.வடிவேல்