தமிழக அரசு வெடிமருந்து தொழிற்சாலை மூடல்:
தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் தமிழ்நாடு அரசு வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த இந்த தொழிற்சாலையில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே, தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்த வெடிமருந்து தொழிற்சாலை நேற்றுடன் மூடப்பட்டது. இதனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவந்த தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.