கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவை மாவட்டத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஹரிகரன் இன்று வெளியிட்டார்.
கோவை மாவட்டத்தில உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிகரன், கோவை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2861536 பேர் எனவும், இதில் ஆண் வாக்காளர்கள் 1420408 பேரும், பெண் வாக்காளர்கள் 1440845 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 283 பேரும் இருப்பதாக தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள இன்று முதல் வருமல 31.10.2017 வரை படிவங்கள் பெறப்பட உள்ளது எனவும், 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரு தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடந்தப்பட உள்ளது எனவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.