
சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அம்மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் முதலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டு இருந்தது. இதனால் உயிரிழப்பு முதல் அலையை விட இரண்டாம் அலையில் குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கரோனா பாதிப்பால் இறந்த நிலையில் சேலம் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.