டெங்கு: களப்பணிகளில் கட்சியினர் ஈடுபட விஜயகாந்த் வேண்டுகோள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையி,
தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் வரும் போதெல்லாம் தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும்.
அந்தவகையில் தமிழகமெல்லாம் ஆட்கொண்டு இருக்கும் டெங்குவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவின் அனைத்து மாவட்டம் சார்பாக நாளை ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்கிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் சாக்கடைகளை சீர்செய்தல், கொசு மருந்து தெளித்தல், அனைத்து பகுதியிலும் பிளிச்சிங் பவுடர் போடுவது போன்ற களப்பணிகளை ஆற்றவேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாதைகள் அடித்து மக்களுக்கு விநியோகம் செய்து டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.