கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஷ்வினி. இவர் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் அவதி பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகத காரணத்தால் கடந்த 11 ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமணையில் அஷ்வினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் டெங்குவால் பாதிக்கப்பட்ட அஷ்வினிக்கு கார்டியாக் அட்டாக் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மூளை செயலிழந்தது. இதனால் நேற்று அவர் மருத்துவமணையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மூளை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 20 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை இன்றி மௌனமாக இருக்கின்றது என்ற குற்றசாட்டை பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
- எம்.வடிவேல்