சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக
அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், ராமச்சந்திரன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மணிவாசகம், சேகர். நகர செயலாளர் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே வசூலிக்கவேண்டும். என மருத்துவக்கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் கடந்த 32 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. தனியார் மருத்துவ கல்லூரியை விட மூன்று மடங்கு கட்டணம் வசூல் செய்வது கண்டிக்க தக்கது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவித்து அதற்கான மருத்துவர்களை நியமித்து. அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்கவேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- காளிதாஸ்