Skip to main content

சென்னை - டெங்குவை ஒழிக்க வீடு வீடாக நிலவேம்பு கசாயம்

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
சென்னை - டெங்குவை ஒழிக்க வீடு வீடாக நிலவேம்பு கசாயம்

சென்னையில் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்குவதை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த ரூ.16 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  10 மாடி உயரம் வரை புகையை வெளிப்படுத்தும் கருவி வாங்கப்பட உள்ளது. குப்பை, சாக்கடையால் டெங்கு காய்ச்சல் பரவாது. சென்னையில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவங்கியது.

சென்னையில் 3 நாளில் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வாகனங்களில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்குவார்கள். நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் நில வேம்பு குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்