Chance of rain with thunder and lightning in Chennai!

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் இன்று (02.07.2021) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment