Skip to main content

புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது; 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரைப்பாளையம்  பகுதியை சேர்ந்த அலாவுதீன்(26)  என்பவர் தன் வீட்டின் பின்புறம் போதைபொருளான கஞ்சாவை  விற்பனை செய்வதாக புவனகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.  

 

k

 

இதனைத் தொடர்ந்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அலாவுதீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைபற்றியுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக இவரது கூட்டாளிகள் யார்? இவருக்கு எப்படி கஞ்சா வருகிறது  என்று விசாரணை செய்துவருகிறார்கள்.

 

k

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாக வெட்டப்பட்ட கஞ்சா வியாபாரி - மூவர் கைது!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Cannabis dealer incident

 

திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் பெயிண்டராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் வேலை கிடைக்காததால் கஞ்சா விற்கும் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று (11.06.2021) பாரதிநகர் பின்புற பகுதியில் அருண் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஏர்போர்ட் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இதனிடையே அவர்களுடைய முதற்கட்ட விசாரணையில், அருண் வெட்டப்படுவதற்கு முன்பு தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நின்றிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரேம், ஜாஹிர், முபாரக் ஆகிய அவருடைய நண்பர்களைப் பிடித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

Next Story

போலீசே போர்டு வைக்கிறது..! - கரூரில் "கஞ்சா" கனஜோர்...!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

karuru incident

 

கரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யாராவது கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு போர்டு வைத்திருக்கிறார்கள் கரூர் போலீசார்.

ஜவுளி மற்றும் கொசுவலை உற்பத்தியில் பிரதான நகரமான கரூரில், தொழிற்கூடங்களும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிகம். தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறிவைத்து தான் இந்த கஞ்சா விற்பனை நடக்கிறது. கரூர் நகர காவல் நிலையம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகச் செய்யப்படுகிறது. பல காவல் அதிகாரிகள் மாமூல் வாங்குவதால் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகவலனுக்கு ரகசியத் தகவல் கிடைத்து வருவதால், அதன் அடிப்படையில் அவர் அவ்வப்போது போலீசாருடன் அதிரடி சோதனை நடத்துகிறார்.

இந்த மாதத்தில் மட்டும் தற்போது வரை 26 நபர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளார். இந்த நிலையில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடை செய்யவும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்து கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கமேடு மேம்பாலம், 5 ரோடு, வஞ்சியம்மன் கோவில் தெரு, ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கஞ்சா விற்பனை செய்தாலோ, வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது போன்ற செயல்பாடுகள் தெரிய வந்தால், கரூர் நகர காவல் நிலையத்திற்கும், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கும்படி அதன் செல்ஃபோன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

 

போலீசே போர்டு வைக்கிறது என்றால் கரூரில் கஞ்சா கனஜோர்தான்...!