Skip to main content

காவிரி மேலாண்மை விவகாரம்: முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம்!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

சார்ந்த செய்திகள்