Internal party dispute... Home invasion attack on DMK official!

திமுக தேனி வடக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகிப்பவர் இரத்தினசபாபதி. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது சிலர் வீடு புகுந்து சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.‌

Advertisment

கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் நாற்காலி ஆகியவற்றைக் கொண்டு சுமார் 5க்கும் மேற்பட்டோர் தாக்கியதில் இரத்தினசபாபதியின் கை மற்றும் கால்களில் பலத்த ரத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அண்மையில் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலில் வீரபாண்டி திமுக பேரூர் செயலாளராகப் பதவி வகித்து வந்த வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தகுமாருக்கு கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. வீரபாண்டிய சேர்ந்த செல்வராஜ் என்பவர் பேரூர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கட்சியில் தனக்குப் பதவி கிடைக்காத விரக்தியிலிருந்த சாந்தகுமாரின் தூண்டுதலாலே இந்த தாக்குதல் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி ஆளுங்கட்சியில் உட்கட்சி தேர்தலால் உ.பி.கள் மோதிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.